கணக்கு எழுதினா மட்டும் ? பணத்தை உங்க வசப்படுத்த 'சிவப்பு பேனா' Strategy உங்களுக்குத் தெரியுமா?

உங்க டைரியை வெறும் நோட்டா இல்லாம, உங்களுக்கான 'பண மேலாளரா' மாத்துற வித்தை — ஸ்மார்ட் குறியீடுகள், Red Pen Audit மற்றும் பணம் சேமிக்க மாஸ்டர் பிளான்கள்.

Meta Mudhaleedu4 min read4 நிமிட வாசிப்பு

#பைசாகணக்கு உங்க டைரியை வெறும் நோட்டா இல்லாம, உங்களுக்கான 'பண மேலாளரா' மாத்துற வித்தை இதோ!

கடந்த ஒரு வாரமா செலவு எழுதிட்டு இருக்கீங்களா? அந்த எண்கள் அமைதியா ஒரு உண்மையைச் சொல்லுது. நீங்க கவனிக்கல… ஆனா பணம் கவனிச்சுட்டு இருக்கு!

இதுக்கு முந்தைய பகுதியை இன்னும் படிக்கல்லைன்னா, Part 1 இங்க இருக்கு.

டைரி எழுதுறது 'வேகம்'… சேமிப்பு 'விவேகம்'!#

கணக்கு எழுத நேரமில்லைன்னு இனி சொல்ல முடியாது. இந்த மெத்தடை ஃபாலோ பண்ணுங்க:

  • ஸ்மார்ட் குறியீடுகள்: இனிமே "Petrol — 500"னு எழுதாதீங்க, வெறும் "Pet — 500"னு எழுதுங்க. Veg (Veggies), ZF (Zomato/Swiggy), M (Milk), Oth (Others) அஞ்சு நிமிஷ வேலை இப்போ ரெண்டு நிமிஷத்துல முடிஞ்சிடும்!
  • ஒரு நிமிடம்: பகலில் செலவு செய்யும்போது சிலவற்றை மறக்கலாம். தினமும் இரவு தூங்குவதற்கு முன், உங்கள் UPI (GPay/PhonePe) மெசேஜ்களை ஒருமுறை செக் செய்துவிட்டு டைரியை எழுதுங்கள். Also use a same account for UPI spending. டைரியை எப்போதும் உங்கள் போன் சார்ஜர் பக்கத்திலேயே வையுங்கள் — அது ஒரு சிறந்த 'Reminder'.

கணக்கு எழுதிய பிறகு என்ன செய்ய வேண்டும்?#

உங்களுடைய ஒரு வாரத் தரவுகள் உங்கள் character பற்றி ஒரு கதையைச் சொல்லும். அதை ஆராயுங்கள்:

Red Pen Audit: இதுதான் மிக முக்கியமான கட்டம். வார இறுதியில் ஒரு சிவப்பு பேனாவை எடுங்கள். உங்கள் டைரியைப் புரட்டி, எந்தெந்தச் செலவுகள் "அவசியமற்றவை" அல்லது "இதைத் தவிர்த்திருக்கலாம்" என்று தோன்றுகிறதோ, அவற்றைச் சுற்றி ஒரு வட்டம் போடுங்கள்.

உதாரணம்: பசியே இல்லாதபோது ஆர்டர் செய்த பீட்சா, தேவையில்லாமல் வாங்கிய ஒரு மொபைல் கேஸ். அந்தச் சிவப்பு வட்டங்கள் உங்கள் பணத்தை உறிஞ்சும் 'ஓட்டைகள்'.

சிவப்பு வட்டம் போட வேண்டிய சில 'கண்ணுக்குத் தெரியாத' செலவுகள்!#

  1. "சோம்பேறித்தன" டெலிவரி கட்டணம் — Convenience Trap: பக்கத்தில் இருக்கும் ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டால் ₹150. ஆனால், அதே உணவை ஆப்பில் ஆர்டர் செய்யும்போது டெலிவரி சார்ஜ், பேக்கிங் சார்ஜ் எனச் சேர்த்து ₹220 ஆகும். அந்த ₹70 கூடுதல் செலவு ஒரு தேவையற்ற சிவப்பு வட்டம்!
  2. Sale Trap: "50% ஆஃபர்" அல்லது "Buy 1 Get 1" என்று விளம்பரத்தைப் பார்த்ததும், தேவை இல்லாவிட்டாலும் ஒரு சட்டையையோ அல்லது பொருளையோ வாங்குவது. நீங்கள் ₹1000 மிச்சப்படுத்தவில்லை, மாறாகத் தேவை இல்லாத ஒரு பொருளுக்கு ₹1000 நஷ்டம் அடைந்துள்ளீர்கள். இது ஒரு பெரிய சிவப்பு வட்டம்!
  3. Late Payment Fee Trap: மின்சார பில் (EB Bill), கிரெடிட் கார்டு பில் அல்லது மொபைல் ரீசார்ஜ் போன்றவற்றைச் சரியான தேதியில் கட்டத் தவறுவதால் போடப்படும் அபராதத் தொகை (Penalty). உழைப்பு இல்லாமல் வீணாகப் போகும் பணம் இது!
  4. Water Bottle: வெளியே செல்லும்போது வீட்டிலிருந்து ஒரு தண்ணீர் பாட்டில் எடுத்துச் செல்லாததால், ஒவ்வொரு முறையும் ₹20 கொடுத்து வாங்குவது. ஒரு மாதத்திற்குப் பார்த்தால் இது ₹400-ஐத் தாண்டும்.
  5. Zombie Subscriptions: ஆரம்பத்தில் ஆர்வமாக எடுத்துவிட்டு, இப்போது பயன்படுத்தாத ஜிம் மெம்பர்ஷிப் (Gym Membership) அல்லது ஏதோ ஒரு மொபைல் ஆப் (Premium Apps). எப்போதாவது பார்ப்போம் என்று வைத்திருக்கும் OTT பிளான்கள்.
  6. "கைமாற்று" எனும் காணாமல் போகும் பணம்: நண்பர்களுக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கோ 'சின்னத் தொகை தானே' என்று ₹100, ₹200 என்று கைமாற்றாகக் கொடுத்துவிட்டு, அதைத் திரும்பக் கேட்காமல் விடுவது. இதுவும் உங்கள் கணக்கில் நஷ்டமே!
  7. பழக்க"தோஷ" செலவுகள்: பசியே இல்லாதபோது சும்மா 'டைம் பாஸ்' செய்ய வாங்கும் ஸ்நாக்ஸ், கூல் டிரிங்க்ஸ் அல்லது சிகரெட் போன்ற உடல்நலத்திற்கும் பணத்திற்கும் கேடு விளைவிக்கும் செலவுகள்.

வகைப்படுத்துதல்#

உங்கள் மொத்த வாரச் செலவைக் கூட்டி, அதை மூன்று பிரிவுகளாகப் பிரிக்க முயற்சி செய்யுங்கள்:

  • தேவைகள் (Needs): வாடகை, பால், மின்சாரம் — இவை தவிர்க்க முடியாதவை.
  • விருப்பங்கள் (Wants): சினிமா, வெளி உணவு, பிராண்டட் உடைகள் — இவை உங்கள் சந்தோஷத்திற்காகச் செய்தவை.
  • Red Pen செலவுகள் (Waste): லேட் ஃபீ (Late fee), பயன்படுத்தாத சந்தாக்கள் — இவற்றுக்குச் சிவப்பு வட்டம் இடுங்கள்.

அடுத்த வாரம் இந்தச் சிவப்பு வட்டங்கள் வராமப் பார்த்தாலே போதும், மாச கடைசில உங்ககிட்ட ஒரு கணிசமான தொகை மிஞ்சும்.

பணத்தைச் சேமிக்க மாஸ்டர் பிளான்கள்!#

  1. 24 மணி நேர விதி: ஆன்லைன்ல எதையாவது பார்த்த உடனே வாங்கணும்னு தோணுதா? உடனே 'Buy Now' கொடுக்காதீங்க. 24 மணி நேரம் வெயிட் பண்ணுங்க. அடுத்த நாள் அதே ஆர்வம் இருக்காது. இது தேவையற்ற செலவுகளை 90% குறைக்கும்.
  2. சில்லறை செலவுகளின் விஸ்வரூபம்: "வெறும் 20 ரூபாய் டீ தானே, 50 ரூபாய் ஸ்நாக்ஸ் தானே"ன்னு நாம கணக்குல எடுக்க மாட்டோம். ஆனா உங்க டைரியில அந்த 'சில்லறை' செலவுகளை மட்டும் தனியா ஒரு வாரம் கூட்டிப் பாருங்க. அதுதான் பெரிய தொகையா இருக்கும். இதைக் கொஞ்சம் கட்டுப்படுத்தினாலே மாதம் ₹2000 வரை மிச்சப்படுத்தலாம்.
  3. சுழற்சி முறை: Netflix, Prime, Hotstar-னு எல்லாத்தையும் ஒரே நேரத்துல ரீசார்ஜ் பண்ணாதீங்க. இந்த மாசம் ஒரு நல்ல சீரிஸ் நெட்ஃபிக்ஸ்ஸில் வருதா? அதை மட்டும் எடுங்க. அடுத்த மாசம் வேறொன்னுக்குப் போங்க. வருஷத்துக்கு ₹5,000-க்கு மேல மிச்சமாகும்!
    • பயன்பாடு டெஸ்ட்: ஒரு மாசத்துல ஒரு OTT-யை நீங்க 2 தடவைக்கு மேல பார்க்கலைன்னா, அதைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. உடனே கேன்சல் பண்ணுங்க.

அடுத்த கட்டம் என்ன?#

இந்த ஒரு வாரம் உங்க டைரியில அந்தச் 'சிவப்பு வட்டங்களை' அடையாளம் காணுங்க. நீங்க எங்க தோக்குறீங்கன்னு உங்களுக்கே தெரிஞ்சிடும். Then save it properly.

  • personal finance
  • budgeting
  • savings

All Fundamental Analysisஅனைத்து அடிப்படை பகுப்பாய்வு

Fundamental Analysisஅடிப்படை பகுப்பாய்வு

சம்பளம் வந்த வேகத்துல காணாம போயிடுதா? 10-ஆம் தேதிக்கு மேல காசு எங்க போகுதுன்னே தெரியலையா?

பேனா மற்றும் டைரி வச்சு எப்படி உங்க மாசாந்திர செலவை துல்லியமா கணக்கு வைக்கிறதுன்னு விளக்கும் ஒரு எளிய, ஆடம்பரமில்லாத பட்ஜெட் முறை.

3 min read3 நிமிட வாசிப்பு

Fundamental Analysisஅடிப்படை பகுப்பாய்வு

வாரம் ஒரு தடவை கூட Use பண்ணாத TVக்கு Research பண்றோம்; தினமும் Use பண்ணுறதுக்கு பண்றோமா?

தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்குற பொருட்கள் — Water Bottle முதல் Phone வரை — வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. என் வாழ்க்கையை genuinely improve பண்ணிய 12 purchases பற்றிய thread.

5 min read5 நிமிட வாசிப்பு

Fundamental Analysisஅடிப்படை பகுப்பாய்வு

1 லட்சமா? 10 லட்சமா? Share Market-ல ஜெயிக்க உண்மையில் எவ்ளோ பணம் தேவை?

Trader-க்கும் Investor-க்கும் உள்ள வித்தியாசம், உங்களுக்கு எவ்ளோ மூலதனம் தேவை, எந்த மாதிரி லாபம் எதிர்பார்க்கலாம் என்பதை விரிவாக விளக்கும் கட்டுரை.

7 min read7 நிமிட வாசிப்பு