வெள்ளி தான் அடுத்த தங்கம்! முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் — 4 காரணங்கள்
தங்கம்-வெள்ளி ரேஷியோ (GSR), ரூபாய் மதிப்பு சரிவு, விண்ணை முட்டும் Industrial தேவை, அரசு & RBI-யின் புதிய கொள்கைகள் — கணக்கு போட்டே வெள்ளியின் எதிர்காலத்தை விளக்கும் கட்டுரை.
வெள்ளியில் முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் என்பதற்கான 4 முக்கிய காரணங்கள்:
- தங்கம்-வெள்ளி விகிதம் (GSR) — Ratio
- இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு — Rupee Depreciation
- விண்ணை முட்டும் Industrial தேவை
- அரசின் புதிய கொள்கைகள் & RBI-யின் பங்கு
சும்மா குருட்டாம் போக்குல சொல்லல — theory-யும் calculation-உம் இருக்கு. ஒவ்வொன்றா பார்ப்போம்.
1. GSR — Gold Silver Ratio: என்ன அது?#
சிம்பிளா சொல்லணும்னா, எத்தனை கிராம் வெள்ளி கொடுத்தா ஒரு கிராம் தங்கம் வாங்க முடியும்னு சொல்ற கணக்கு தான் இது.
அந்த காலத்துல எல்லாம், ஒரு 40–50 கிராம் வெள்ளி கொடுத்தாலே, ஒரு கிராம் தங்கம் வாங்கிடலாம். அதுதான் அதோட சராசரி (Average) — 40:1.
ஆனா இப்போ நிலைமை என்ன தெரியுமா? கிட்டத்தட்ட 80–90 கிராம் வெள்ளி தேவைப்படுது! இதோட அர்த்தம் என்னன்னா, தங்கத்தோட ஒப்பிடும்போது வெள்ளி ரொம்ப ரொம்ப மலிவா, அண்டர்வேல்யூடா (undervalued) இருக்கு.
Mean Reversion — ரப்பர் பேண்ட் தியரி#
இந்த விகிதம் அதன் சராசரியை நோக்கித் திரும்பும் (Mean Reversion). அப்படினா?
அது ஒண்ணுமில்ல பாஸ்... ஒரு ரப்பர் பேண்ட்டை ரொம்ப தூரம் இழுக்குறீங்கன்னு வச்சுக்கோங்க. விட்டா என்ன ஆகும்? 'சர்'னு பழைய இடத்துக்கே வேகமா திரும்பி வரும்ல? அதுதான் 'மீன் ரிவர்ஷன்' (Mean Reversion).
வரலாற்றுல பல தடவை இந்த தங்கம்-வெள்ளி ரேஷியோ ரொம்ப அதிகமா போயிருக்கு. அப்போலாம் கொஞ்ச நாள்ல, வெள்ளி விலை ராக்கெட் வேகத்துல ஏறி, அந்த பழைய 40–50 ரேஞ்சுக்கு வந்துடும் — 1980, 2011 etc.
கடைசியா 2011-ல கூட இப்படித்தான் நடந்தது. இப்போ மறுபடியும் ரேஷியோ ரொம்ப அதிகமா இருக்கு. சோ, அந்த ரப்பர் பேண்ட் பழைய இடத்துக்கு வர ரெடியா இருக்குனு அர்த்தம்!
2. வெள்ளி என்ன கொலுசுக்கு மட்டும்தானா?#
அங்கதான் பெரிய ட்விஸ்ட்டே இருக்கு! வெள்ளி இப்போ வெறும் நகை பொருள் இல்ல. அது ஒரு இண்டஸ்ட்ரியல் மெட்டல் (Industrial Metal).
- Solar Panel: உலகமே பசுமை ஆற்றலுக்கு மாறுது. எல்லா சோலார் பேனல்லையும் வெள்ளி கண்டிப்பா வேணும்.
- எலெக்ட்ரிக் கார் (EV): ஒரு எலெக்ட்ரிக் கார்ல, பெட்ரோல் காரை விட ரெண்டு மடங்கு வெள்ளி பயன்படுத்துறாங்க.
- 5G டெக்னாலஜி & செமிகண்டக்டர்: நம்ம போன், லேப்டாப், எல்லா எலெக்ட்ரானிக்ஸ்லயும் வெள்ளி இல்லாம சிப் செய்ய முடியாது.
உலகம் டெக்னாலஜில வளர வளர, வெள்ளியோட தேவை இன்னும் பல மடங்கு அதிகமாகும். ஆனா உற்பத்தி அந்த அளவுக்கு இல்ல. டிமாண்ட் ஜாஸ்தி, சப்ளை கம்மி... அப்போ விலை என்ன ஆகும்னு நீங்களே யோசிச்சு பாருங்க!
3. அரசாங்கமும் RBI-யும் இப்ப வெள்ளியைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாங்க!#
இதுதான் முக்கியமான பாயின்ட். உலகத்துல இருக்கிற பெரிய பெரிய நாட்டு அரசாங்கங்கள் எல்லாம், தங்கத்தை மட்டும் நம்பி இல்லாம, அதுக்கு அடுத்தபடியா வெள்ளியையும் ஒரு பாதுகாப்பு சொத்தா (secondary hedge) பாக்க ஆரம்பிச்சிட்டாங்க.
இதுவரைக்கும் நீங்க பேங்குக்கு போனீங்கன்னா, உங்க தங்க நகை, தங்கக் கட்டி, தங்க நாணயத்தை மட்டும்தான் அடமானம் வெச்சு உடனடியா லோன் (Gold Loan) வாங்க முடியும். நீங்க ஒரு கிலோ வெள்ளி கொலுசையோ, பாத்திரத்தையோ கொண்டு போய் கொடுத்தா, "இதெல்லாம் வெச்சு லோன் தர முடியாதுங்க"னு சொல்லிடுவாங்க. ஏன்னா, வெள்ளிக்கு முறையான தர நிர்ணயம், ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தை அமைப்பு கம்மியா இருந்துச்சு.
இந்த வருஷம், அதாவது 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்துதான் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் தீவிரமாகியிருக்கு. குறிப்பா சொல்லணும்னா, 2025-ன் முதல் காலாண்டில் (January – March) நிதி அமைச்சகம் மற்றும் RBI அமைத்த சில உள்-குழுக்களின் (internal committees) அறிக்கைகள்ல தான் வெள்ளியை ஒரு முக்கிய நிதி சொத்தாக அங்கீகரிக்கணும் என்ற பரிந்துரைகள் வெளிவர ஆரம்பிச்சது.
அதன்பிறகு, கடந்த சில மாதங்களா நிதித்துறை வட்டாரங்கள்ல வெள்ளியை அடமானம் வைக்க அனுமதிக்கிறது (pledging) பத்தி பேசிட்டு இருக்காங்க.
4. இப்ப கொஞ்சம் கணக்கு போட்டுப் பாப்போம்#
சரி, நாம கதை பேசினது போதும். அப்போதான் விஷயம் எவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்குன்னு தெரியும்.
- தங்கம்-வெள்ளி ரேஷியோ (GSR): இப்போ 85-ல இருக்கு (அதாவது 85 அவுன்ஸ் வெள்ளி = 1 அவுன்ஸ் தங்கம்).
- நம்ம டார்கெட் ரேஷியோ: இது பழையபடி சராசரியா 50-க்கு வரணும்.
- தங்கம் விலை (2036 கணிப்பு): 2036-ல ஒரு அவுன்ஸ் தங்கத்தோட விலை $5,200 இருக்கும்னு ஒரு கணக்குல வச்சுப்போம்.
- இன்றைய வெள்ளி விலை (நம்ம ஊர்ல): இப்போ ஒரு கிராம் வெள்ளி தோராயமா ₹140.
ரேஷியோ மாறுனா மட்டும் வெள்ளிக்கு எவ்வளவு லாபம்?#
இப்போ இருக்கிற 85 ரேஷியோ, நம்ம டார்கெட்டான 50-க்கு வரணும்னா என்ன ஆகணும்?
85 ÷ 50 = 1.7
அப்படின்னா, தங்கம் விலை அப்படியே இருந்தாலும் சரி, வெள்ளி விலை மட்டும் தனியா 70% ஏறி ஆகணும்! அப்போதான் அந்த ரேஷியோ கணக்கு சரியா வரும். இது முதல் லாபம்.
2036-ல வெள்ளி விலை என்ன ஆகும்?#
2036-ல தங்கம் விலை one ounce $5,200 (estimates), ரேஷியோ 50-ன்னு வச்சா:
5,200 ÷ 50 = $104
அப்போ, 2036-ல ஒரு அவுன்ஸ் வெள்ளியோட விலை $104 இருக்கும். அதை நம்ம ஊரு ரூபாய் கணக்குக்கு மாத்துவோம் வாங்க! இங்க தான் கேம் இருக்கு. ரெண்டு விஷயத்தை கவனிக்கணும்:
- டாலர் மதிப்பு: நம்ம ரூபாய் மதிப்பு வருஷத்துக்கு ஒரு 4% கம்மியாகுதுன்னு வச்சா, 2036-ல ஒரு டாலரோட மதிப்பு ₹136 ரூபாயா இருக்கும்.
- அவுன்ஸ் கணக்கு: ஒரு அவுன்ஸ்னா 31.1 கிராம்.
இப்போ கணக்கு போடுவோம்:
முதல்ல, ஒரு கிராம் வெள்ளியோட விலையை டாலர்ல பாப்போம்: 104 ÷ 31.1 ≈ $3.34.
இப்போ இதை நம்ம ரூபாய்ல மாத்துவோம்: $3.34 × ₹136 ≈ ₹454.
யோசிச்சு பாருங்க! இப்போ ₹140-க்கு விக்கிற ஒரு கிராம் வெள்ளி, 2036-ல ₹454 வரைக்கும் போக வாய்ப்பிருக்கு!
இதைக் கணக்கு பண்ணிப் பாத்தா, நீங்க வெள்ளில போடுற முதலீடு, வருஷா வருஷம் சராசரியா 11.1% கூட்டு வட்டியில வளர்ந்த மாதிரி இருக்கும்! பேங்க் FD-யை விட இது கிட்டத்தட்ட ரெண்டு மடங்கு அதிகம். This is bare minimum!
முடிவா#
தங்கத்துல முதலீடு பண்றது புத்திசாலித்தனம் தான். ஆனா வெள்ளியை இப்ப கவனிக்காம விடுறது அதைவிட பெரிய தப்பா இருக்கலாம். அமைதியா இருந்துட்டு, டைம் வரும்போது அடிக்குற ஆள் மாதிரி வெள்ளி! ஒரு கண்ணு வெச்சுக்கோங்க!
Gold vs Silver, முதலீடு செய்யும் முறைகள், இரண்டின் உலகளாவிய தேவை (demands), மற்றும் வெள்ளி சுரங்கங்கள் (silver mining) பத்தி இன்னொரு கட்டுரையில விரிவாகப் பேசலாம்.
- silver
- gold silver ratio
- investment
- precious metals