விடி "வெள்ளி" தெரிகிறது: அடுத்த தங்கமா!?

வெள்ளியை அடமானமாக வைத்து கடன் வாங்க RBI வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல்கள், வெள்ளி விலை மேலும் உயர சாத்தியமான காரணிகள், வெள்ளியில் முதலீடு தொடங்கும் வழிகள் — ஒரு விரிவான பார்வை.

Meta Mudhaleedu2 min read2 நிமிட வாசிப்பு

வெள்ளியை அடமானமாக வைத்து கடன் வாங்குவது குறித்து ரிசர்வ் வங்கி (RBI) சில வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. தங்கம் போன்றே வெள்ளிக்கும் ஒரு முறையான கட்டமைப்பு உருவாக்கப்படுவதே இதன் நோக்கம். விரிவாக சொன்னால்...

RBI-ன் வரைவு வழிகாட்டுதல்கள்#

இந்த வரைவு வழிகாட்டுதல்களின்படி, வெள்ளி நகைகள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் குறிப்பிட்ட வெள்ளி நாணயங்களை அடமானமாக ஏற்றுக்கொள்ள வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்படலாம்.

வெள்ளி சமீப காலங்களில் அசுர வளர்ச்சி பெற்று இருக்கிறது. கோவிட் முன் வெள்ளி வாங்கி இருந்தால் ஸ்டாக் மார்க்கெட் பேர் செய்திருக்கும்.

RBI தங்கக் கடன்களுக்கான கடன் மதிப்பு (LTV) வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் (75% வரை), வெள்ளிக் கடன்களுக்கான LTV குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. எனினும், தங்கக் கடன்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் வெள்ளிக் கடன்களுக்கும் பொருந்தக்கூடும்.

இந்த வரைவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. RBI பெறும் கருத்துகளின் அடிப்படையில் இதில் மாற்றங்கள் இருக்கலாம். முழுமையான வழிகாட்டுதல்கள் வெளியான பிறகே வெள்ளிக் கடன்கள் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும்.

வெள்ளி அடகு வைக்கும் நிலை எதிர்காலத்தில் வரும் என்று சிலர் முன்பே சொல்லியிருந்தாலும், இவ்வளவு சீக்கிரம் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். RBI இந்த முடிவுக்கு வந்ததற்கு காரணம் உண்டு — அது வெள்ளியை தங்கத்திற்கு மாற்றாக கொண்டு வரத்தான். இதை நான் முற்றிலும் வரவேற்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்கிறேன்.

வெள்ளி மேலும் உயரும் — காரணிகள்#

தொழில்துறை தேவை அதிகரிப்பு: எலக்ட்ரானிக்ஸ், சோலார் பேனல்கள், எலக்ட்ரிக் வாகனங்கள் போன்ற தொழில்களில் வெள்ளியின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறைவான விநியோகம்: வெள்ளியின் உற்பத்தி தேவைக்கு ஈடாக அதிகரிக்கவில்லை. பல சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வெள்ளியின் அளவு குறைந்து வருவது ஒரு காரணமாக இருக்கலாம்.

பணவீக்கம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை: பணவீக்கம் அதிகரிக்கும் போது அல்லது பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவும் போது, முதலீட்டாளர்கள் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி திரும்புவது வழக்கம். இது வெள்ளியின் தேவையை அதிகரித்து விலையை உயர்த்தலாம்.

தங்கத்தின் விலை உயர்வு: பொதுவாக தங்கத்தின் விலை உயரும்போது வெள்ளியின் விலையும் அதைத் தொடர்ந்து உயரும் போக்கு காணப்படுகிறது. தங்கம் ஒரு முக்கிய விலைமதிப்பற்ற உலோகம் என்பதால், அதன் விலை உயர்வு வெள்ளியின் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

வெள்ளியில் முதலீடு செய்ய தொடங்கலாம்#

ஒரு கிராம் தங்கம் வாங்கினால் ஒரு 25 கிராம் வெள்ளியும் வாங்க முயலுங்கள். ஆனால் பாத்திரங்கள் வேண்டாம், காயின் தான் சரி வரும். வசதி இருந்தால் வெள்ளிக் கட்டி கிலோ கணக்கில் வாங்கலாம். Silver ETF-ஐ SIP முறையில் வாங்க முயற்சி செய்யுங்கள்.

நல்ல முதலீடாக இது மாற எல்லா அறிகுறிகளும் தென்படுகிறது. வெள்ளி நகைகள் சீர் செய்யும் காலம் விரைவில் வந்து விடும்.

வெள்ளி விழா கொண்டாட்டமாக உங்கள் வாழ்வு அமையட்டும்!

  • silver
  • RBI
  • investment
  • precious metals

All Macro & Newsஅனைத்து பொருளாதாரம் & செய்திகள்

Macro & Newsபொருளாதாரம் & செய்திகள்

வெள்ளி தான் அடுத்த தங்கம்! முதலீடு செய்ய இதுவே சரியான நேரம் — 4 காரணங்கள்

தங்கம்-வெள்ளி ரேஷியோ (GSR), ரூபாய் மதிப்பு சரிவு, விண்ணை முட்டும் Industrial தேவை, அரசு & RBI-யின் புதிய கொள்கைகள் — கணக்கு போட்டே வெள்ளியின் எதிர்காலத்தை விளக்கும் கட்டுரை.

4 min read4 நிமிட வாசிப்பு

Macro & Newsபொருளாதாரம் & செய்திகள்

தங்கம் விலை ஏன் ராக்கெட் வேகத்துல ஏறுது?

கொரோனாவுக்கு அப்புறம் தங்கத்தின் விலை ஏன் இப்படி எகிறுது — பயம், போர், பணவீக்கம், கல்யாண டிமாண்ட் என காரணங்களை ஜாலியா விளக்கும் கட்டுரை; முதலீடு செய்யும் வழிகளும்.

3 min read3 நிமிட வாசிப்பு

Fundamental Analysisஅடிப்படை பகுப்பாய்வு

தங்கம் மீதான தவறான பார்வைகளும், உண்மையான மதிப்பும்!

தங்கம் ஒரு குமிழியா? FD-யை விட மோசமா? இப்போது வாங்க தாமதமா? — தங்கத்தைப் பற்றிய பொதுவான சந்தேகங்களுக்கு உண்மைகளுடன் பதில் சொல்லும் கட்டுரை.

2 min read2 நிமிட வாசிப்பு