பேங்க் பங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது? பார்க்க வேண்டிய 6 விஷயங்கள்
பேங்கிங் செக்டார் அடி வாங்கும் நேரத்தில் நல்ல பேங்க் பங்குகளை குறைந்த விலையில் வாங்க — CAR, NPA, CASA, NIM, P/B, Management Quality என ஆறு அளவுகோல்களை தமிழில் விளக்கும் கட்டுரை.
பேங்கிங் செக்டார் கொஞ்சம் அடி வாங்கிட்டு இருக்கு. ரிசல்ட்ஸ் சரியில்ல, நியூஸ்லாம் நெகட்டிவ்வா வருது. இந்தியாவில் அடுத்த ஒரு வருஷத்துக்குள் personal, auto, housing லோன் டிஃபால்ட்கள் பெருகும் என்ற கணிப்புகளும் வருகின்றன.
இப்படிப்பட்ட நேரம் தான் நல்ல பேங்க் பங்குகளை குறைந்த விலையில் வாங்க சரியான டைம். ஆனா, எந்தப் பங்கை தேர்ந்தெடுப்பது? பார்க்க வேண்டிய 6 விஷயங்கள் இதோ.
1. Capital Adequacy Ratio (CAR)#
சிம்பிளா சொன்னா, இது ஒரு பேங்கோட ஃபைனான்சியல் ஸ்ட்ரென்த்தை காட்டுற ஒரு metric. பேங்க் எவ்ளோ சேஃபா இருக்குனு தெரிஞ்சுக்க இது ரொம்ப முக்கியம். ஒருவேளை லோன்ல நஷ்டம் வந்தா, அத தாங்குற சக்தி பேங்குக்கு இருக்கானு இந்த ரேஷியோ காட்டும்.
என்ன பார்க்க வேண்டும்: ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) ஒரு மினிமம் லெவல் செட் பண்ணிருக்கு (பொதுத்துறை வங்கிகளுக்கு 12%). ஒரு பேங்கோட CAR அந்த லிமிட்டை விட ஜாஸ்தியா இருந்தா ரொம்ப நல்லது. அது அந்த பேங்க் ஸ்ட்ராங்கா இருக்குனு ஒரு நல்ல சைன்.
2. NPA (Non-Performing Assets)#
பேங்க் குடுத்த லோன்ல, வட்டியோ அசலோ 90 நாள் வரைக்கும் திரும்ப வரலைனா, அது வாராக்கடன். இது பேங்கோட லாபத்தை குறைக்கும் ஒரு பெரிய மைனஸ்.
என்ன பார்க்க வேண்டும்: NPA எப்பவுமே கம்மியா இருக்கணும். Gross NPA 3%-க்கு கீழையும், Net NPA 1%-க்கு கீழையும் இருந்தா ரொம்ப நல்லது.
3. CASA Ratio (Current Account Savings Account)#
பேங்கோட மொத்த டெபாசிட்ல, கரண்ட் அக்கவுண்ட் மற்றும் சேவிங்ஸ் அக்கவுண்ட்ல எவ்ளோ பணம் இருக்குனு சொல்றதுதான் CASA. இந்த அக்கவுண்ட்களுக்கு பேங்க் கம்மியா வட்டி கொடுத்தா போதும். அதனால, இது பேங்குக்கு குறைந்த செலவில் கிடைக்கும் பணம்.
என்ன பார்க்க வேண்டும்: CASA ரேஷியோ 40%-க்கு மேல இருந்தா ரொம்ப நல்லது. இது பேங்கோட லாபம் அதிகரிக்க ஒரு முக்கிய காரணம். இது பேங்குக்கு ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட்.
4. Net Interest Margin (NIM)#
பேங்க் லோன் மூலமா சம்பாதிக்கிற வட்டிக்கும், டெபாசிட்க்கு குடுக்குற வட்டிக்கும் உள்ள வித்தியாசம் தான் NIM. இது பேங்கோட கோர் பிஸ்னஸ்ல வர்ற உண்மையான லாபம்.
என்ன பார்க்க வேண்டும்: NIM அதிகமாவும், ஸ்டேபிளாகவும் இருக்கணும். இந்திய பேங்க்ஸுக்கு பொதுவா 3%-க்கு மேல NIM இருந்தா, அது ஒரு ஹெல்தியான சைன்.
5. Price to Book Value (P/B) Ratio#
பேங்கோட ஷேர் விலை, அதோட உண்மையான புத்தக மதிப்பை விட எத்தனை மடங்கு அதிகமா இருக்குனு காட்டுறதுதான் P/B ரேஷியோ. பேங்க்ஸை மதிப்பிடுவதற்கு இது ஒரு முக்கியமான அளவுகோல்.
என்ன பார்க்க வேண்டும்: P/B ரேஷியோ கம்மியா இருந்தா, ஷேர் விலை மலிவா இருக்குனு ஒரு அர்த்தம். ஆனா, இத மட்டுமே வச்சு முடிவு பண்ணக்கூடாது. NPA கம்மியாவும், லாபம் நல்லா வளர்ற பேங்குக்கு P/B கொஞ்சம் அதிகமா இருந்தாலும் பரவாயில்லை.
6. Management Quality & Technology#
நம்பர்ஸ் மட்டும் முக்கியம் இல்ல. பேங்கோட Management டீம் யாரு, அவங்க முடிவுகள் எப்படி இருக்கு, நேர்மையா இருக்காங்களானு பார்க்கணும். இப்போதைய காலத்துல, பேங்கோட மொபைல் ஆப், ஆன்லைன் சர்வீஸ் (Digital Banking) எப்படி இருக்கு என்பதும் ரொம்ப முக்கியம்.
என்ன பார்க்க வேண்டும்: ஒரு நல்ல, அனுபவமுள்ள நேர்மையான team இருக்கணும். கஸ்டமர்ஸுக்கு ஈஸியா இருக்குற மாதிரி நல்ல டெக்னாலஜி யூஸ் பண்ற பேங்க், எதிர்காலத்துல நல்லா வளரும்.
இன்னைக்கு தியரி பார்த்தாச்சு! அடுத்து, ஒரு பேங்க்கை உதாரணமா எடுத்து, நாம பார்த்த இந்த எல்லா பாயிண்ட்ஸையும் வச்சு, அதை எப்படி பிராக்டிகலா அனலைஸ் பண்றதுன்னு செஞ்சு காட்டுறேன்.
- banking
- value investing
- stock analysis
- ratios