வாரம் ஒரு தடவை கூட Use பண்ணாத TVக்கு Research பண்றோம்; தினமும் Use பண்ணுறதுக்கு பண்றோமா?

தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்குற பொருட்கள் — Water Bottle முதல் Phone வரை — வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. என் வாழ்க்கையை genuinely improve பண்ணிய 12 purchases பற்றிய thread.

Meta Mudhaleedu5 min read5 நிமிட வாசிப்பு

வாரம் ஒரு தடவை கூட use பண்ணாத TV வாங்குறதுக்கு YouTube reviews பார்ப்போம். Reddit முழுக்க படிப்போம். நண்பர்கள்கிட்ட opinion கேட்போம். சில நேரம் நம்ம Twitter-ல இருக்குற @DrVaathi கிட்ட recommendation கேட்போம்.

ஆனா தினமும் நம்ம கையில இருக்கப்போற, தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்கப்போற பொருட்களை வாங்கும்போது மட்டும் research பண்ண மாட்டோம். "இது போதும்", "₹2,000 குறைவா கிடைக்குதே", "இப்போதைக்கு இதையே வாங்கிக்கலாம்"ன்னு காசு பாத்து, கொஞ்சம் கஞ்சம் பண்ணி வாங்கிடுவோம்.

கடந்த சில வருடங்கள்ல நான் வாங்கிய சில purchases, வாங்கும்போது கொஞ்சம் expensive-ஆ தோணிச்சு. ஆனா இன்று திரும்பிப் பாத்தா, அவங்க priceஐ விட, அவங்க remove பண்ணிய frictionதான் எனக்கு அதிக value கொடுத்திருக்கு. அந்த மாதிரி என் வாழ்க்கையை genuinely improve பண்ணிய purchases பற்றி இங்க பகிர்ந்துக்கிறேன்.

Water Bottle#

Water Bottle வாங்கும்போது பெருசா யோசிக்கவே மாட்டோம். Supermarket checkoutல கண்ணுல பட்ட bottle. இல்லனா Plastic cool drink bottle. அதுதான் நம்ம choice.

ஆனா ஒரு bottle தினமும் use பண்ணுற பொருள். அதனால அதுல clean பண்ணுறது easyஆ இருக்கணும். Brush போகணும். Plastic smell வரக்கூடாது. அதனால நான் wide mouth glass bottleதான் வாங்குவேன். Buy a good cleaning brush with it.

Oxford Universityல நடந்த research ஒன்று ஒரு interesting விஷயத்தை சொல்கிறது. நாம் குடிக்கிற vessel, அதன் material, weight, feel எல்லாமே drinking experienceஐ influence பண்ணும். அதனால quality bottle இருந்தா தண்ணீர் குடிக்குற habit இயல்பாவே அதிகமாகும்.

Backpack#

Backpack வாங்கும்போது பெருசா research பண்ணுறது ரொம்ப rare. Amazonல offerல இருக்குறது, office welcome kitல கிடைச்சது, இல்லனா "இதுவே நல்லாத்தான் இருக்கு"ன்னு ₹1,000க்குள்ள வாங்கிடுவோம். இரண்டு வருஷத்துல zip போயிடும். Strap கிழிஞ்சிடும். அப்புறம் மறுபடியும் இன்னொரு bag. Backpack-ஐ நாம ஒரு long-term purchaseஆவே பார்க்க மாட்டோம்.

ஆனா ஒரு நாள் யோசிச்சு பாருங்க. தினமும் உங்க laptop, charger, tablet, documents, headphones, water bottle எல்லாத்தையும் பாதுகாக்குறது இந்த ஒரு bagதான். ₹1 லட்சத்துக்கு மேல value இருக்குற பொருட்களை ₹800 bagக்குள்ள போட்டு எடுத்துட்டு போறது ரொம்ப common.

அதனால ஒரு நல்ல branded backpack வாங்குங்க. (Mokobara, Skybag, Safari)

தோள்ல weight comfortableஆ distribute ஆகணும். Strong zip இருக்கணும். Laptopக்கு நல்ல protection இருக்கணும். ஐந்து வருஷம் use பண்ணாலும் shape மாறக்கூடாது. ஒரு quality backpack தினமும் use பண்ணுறதாலதான் அதோட value புரியும்.

Watch#

Watch வாங்குறதுன்னா நிறைய பேருக்கு இன்னும் இரண்டு optionsதான் தோணும். ₹1500 fashion watch வாங்குவாங்க. இல்லனா கல்யாணத்துக்கு, promotionக்கு, ஒரு expensive watch. ஆனா watch ஒரு special occasion accessory இல்ல. அது தினமும் use பண்ணுற பொருள்.

அதனால ஒரு நல்ல watch வாங்குங்க. Simple design இருக்கட்டும். Stainless steel body இருக்கட்டும். எல்லா dressக்கும் match ஆகுற மாதிரி timelessஆ இருக்கட்டும். பத்து வருஷம் கழிச்சும் பழசா தெரியாத watch வாங்குங்க. தினமும் போட்டுட்டு கிளம்புற அளவுக்கு comfortableஆ இருந்தா போதும்.

Headphones#

Headphones வாங்கும்போது நிறைய பேர் sound quality மட்டும் பார்ப்பாங்க. சிலர் ₹500 earphones வாங்குவாங்க. சிலர் phone கூட freeஆ வந்ததையே use பண்ணுவாங்க. அது கெட்டா இன்னொரு earphone. Headphones வாங்குறதுக்கு பெருசா importance கொடுக்க மாட்டோம்.

ஆனா ஒரு நல்ல noise cancelling headphone வாங்குங்க. Sound qualityக்காக மட்டும் இல்லை. Distraction குறைக்க. Officeல, flightல, coffee shopல, வீட்டுல TV ஓடிக்கிட்டிருந்தாலும், நீங்க செய்யுற வேலையில focus பண்ண உதவும்.

Mattress#

ஒரு mattress showroomக்கு போங்க. ஒவ்வொரு mattressமேலயும் குறைந்தது 10 நிமிஷம் படுத்துப் பாருங்க. Side sleeperஆ, back sleeperஆ, body weight என்னன்னு staffகிட்ட சொல்லுங்க.

ஒரு mattress எட்டு வருஷம் use பண்ணப் போறீங்க. அதனால price பாத்து வாங்காதீங்க. காலையில freshஆ எழுந்திருக்கும் mattressதான் சரியான mattress.

Perfume#

நிறைய பேருக்கு இன்னும் perfumeன்னா body sprayன்னுதான் தோணும். Supermarketல offerல இருக்குற deodorant வாங்கிடுவோம். காலை போட்டுட்டு கிளம்புவோம். இரண்டு மணி நேரத்துல smell போயிடும்.

ஆனா perfume வேற. Body spray வேற. ஒரு நல்ல perfume வாங்குங்க. இன்னும் betterனா, local perfume house போய் உங்க body chemistryக்கு suit ஆகுற fragrance கண்டுபிடிங்க. எல்லாரும் use பண்ணுற perfume வேணும்னு அவசியம் இல்லை.

உங்களுக்கு match ஆகுற ஒரு signature scent இருந்தா போதும். அது dress மாதிரி தினமும் தெரியாது. ஆனா impression மட்டும் நீண்ட நேரம் இருக்கும்.

Toothbrush#

Toothbrush வாங்குறதுல நம்ம logic ரொம்ப simple. Supermarketல offerல இருக்குற ₹50 அல்லது ₹100 brush எடுத்துடுவோம். மூணு மாதத்துக்கு ஒருதடவை மாற்றுவோம். அதுக்கு மேல பெருசா யோசிக்கவே மாட்டோம்.

ஆனா ஒரு electric toothbrush ஒருதடவை try பண்ணி பாருங்க. Pressure சரியா maintain பண்ணும். இரண்டு நிமிஷம் brush பண்ண நினைவூட்டும். ஒவ்வொரு நாளும் consistentஆ clean பண்ண உதவும். நம்ம daily routineல இரண்டு தடவை use பண்ணுற ஒரு பொருளுக்கு கொஞ்சம் extra செலவு பண்ணுறது worthதான்.

புத்தகங்கள்#

புத்தகம் வாங்குறதுக்கு நாம பெருசா யோசிப்போம். Reviews படிப்போம். Friends recommendation கேட்போம். Book Fair போனா கையில தெரிஞ்சதை விட, தெரியாத புத்தகங்களைத்தான் அதிகமா வாங்கிட்டு வருவோம்.

அப்புறம் பாதி புத்தகங்கள் shelfல இருக்கும். படிக்க மட்டும் நேரம் இருக்காது.

அதனால நான் புத்தகம் வாங்குறதை குறைச்சேன். அதுக்கு பதிலா Kindle Unlimited subscription எடுத்தேன். மாதத்துக்கு ₹199 கொடுத்தா லட்சக்கணக்கான புத்தகங்கள் கிடைக்கும். ஒரு புத்தகம் பிடிக்கலனா அடுத்தது. வீட்டுல shelf space தேவையில்லை. Bag weight கூடாது. Reading habit build பண்ணணும்னா, புத்தகம் collect பண்ணாதீங்க. புத்தகம் படிக்க ஆரம்பிங்க.

Quality Shoes#

Shoes onlineல order பண்ணாதீங்க. ஒரு நாள் time எடுத்துக்கிட்டு Nike, Adidas, ASICS, New Balance மாதிரி experience centreக்கு போங்க. Staffகிட்ட பேசுங்க. உங்க foot shape, walking style, usage எல்லாத்தையும் சொல்லுங்க.

ஒரே brandல கூட ஒவ்வொரு modelக்கும் fit வேற மாதிரி இருக்கும். அதனால குறைந்தது 10 முதல் 15 pairs try பண்ணுங்க. Shopல கொஞ்ச நேரம் நடந்துப் பாருங்க. Comfortableஆ feel ஆகுற shoeதான் சரியான shoe.

Laptop#

Laptop வாங்குறதுக்கு நாம ஏற்கனவே நிறைய research பண்ணுவோம். YouTube reviews பார்ப்போம். Reddit படிப்போம். Specs compare பண்ணுவோம். ஆனா compare பண்ணும்போது RAM, processor, benchmark scoreலயே சிக்கிக்கிடக்காதீங்க.

ஒரு MacBook use பண்ணிப் பாருங்க. Battery charge ஒரு நாள் முழுக்க இருக்கும். Charger எடுத்துட்டு சுத்த வேண்டிய அவசியம் குறையும். Trackpad, keyboard, speakers, display, build quality எல்லாமே தினமும் use பண்ணும்போதுதான் value புரியும்.

Phone#

Phone வாங்குறதுக்கும் நாம research பண்ணுவோம். Camera comparison, benchmark, battery test, YouTube reviews, Reddit discussions எல்லாத்தையும் பார்ப்போம். ஆனா specs மட்டும் பாத்து வாங்காதீங்க.

Storeக்கு போய் phoneஐ கையில பிடிச்சுப் பாருங்க. Weight comfortableஆ இருக்குதா, display பிடிக்குதா, camera use பண்ண easyஆ இருக்குதா, software smoothஆ இருக்குதான்னு பாருங்க. பிடிச்சிருந்தா அப்புறம் onlineல order பண்ணிக்கோங்க. Offer கிடைக்கும். Card discounts கூட கிடைக்கும். Research storeல பண்ணுங்க. Purchase onlineல பண்ணுங்க.

நல்ல Purchase என்றால் என்ன?#

இந்த thread luxury products பற்றி இல்லை. தினமும் நம்ம வாழ்க்கையை பாதிக்குற பொருட்களை பற்றி.

எல்லாத்தையும் ஒரே நாள்ல வாங்கணும்னு அவசியம் இல்லை. ஆனா அடுத்த தடவை வாங்கும்போது மட்டும் offer பாத்து வாங்காதீங்க. கொஞ்சம் research பண்ணுங்க. Experience பண்ணுங்க. அப்புறம் வாங்குங்க.

நல்ல purchases பணத்தை செலவு பண்ணாது. தினமும் இருக்குற சின்ன சின்ன frictionsஐ குறைக்கும். அதுதான் long termல biggest return.

  • personal finance
  • spending
  • product choices

All Money & Lifeஅனைத்து பணமும் வாழ்க்கையும்

Money & Lifeபணமும் வாழ்க்கையும்

அபார்ட்மெண்ட் வாங்குறது பலருக்கும் ஒரு பைத்தியக்காரத்தனமான நிதி முடிவு — ஆனா எல்லாருக்கும் இல்லை!

சென்னைல ஒரு 1 கோடி ரூபாய் Flat உதாரணத்தோட — Construction Delay, Pre-EMI Trap, Maintenance, Reconstruction, Resale-ல லோன் சிக்கல் என அபார்ட்மெண்ட் வாங்குவதின் கடுமையான நிதர்சனங்களும், யார் வாங்கலாம் என்பதும்.

3 min read3 நிமிட வாசிப்பு

Money & Lifeபணமும் வாழ்க்கையும்

சொந்த வீடு — ஏன் அவசியம்?

வாடகை வீட்டின் நிலையற்ற தன்மை, ஓனர் தொந்தரவு, 'செத்த பணம்' பிரச்சனைகளிலிருந்து — பாதுகாப்பு, சுதந்திரம், சொத்து என சொந்த வீட்டின் நன்மைகள் வரை ஒரு விரிவான பார்வை.

3 min read3 நிமிட வாசிப்பு

Fundamental Analysisஅடிப்படை பகுப்பாய்வு

1 லட்சமா? 10 லட்சமா? Share Market-ல ஜெயிக்க உண்மையில் எவ்ளோ பணம் தேவை?

Trader-க்கும் Investor-க்கும் உள்ள வித்தியாசம், உங்களுக்கு எவ்ளோ மூலதனம் தேவை, எந்த மாதிரி லாபம் எதிர்பார்க்கலாம் என்பதை விரிவாக விளக்கும் கட்டுரை.

7 min read7 நிமிட வாசிப்பு